அப்பாவி முஸ்லிம் மக்களை சிறைப்படுத்துவதன் ஊடாக, சிறைச்சாலைகள் அடிப்படைவாதிகளை உருவாக்கும் மத்திய நிலையமாக மாறிவிடும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நிதி அமைச்சில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகெண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.
முஸ்லிம்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. முஸ்லிம் பெண்கள் தலைமுடியை மறைத்துக் கொண்டு சென்றாலும், பொதுச் சேவையிலுள்ள பஸ்களில் இம்சைப்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. பாடசாலைகளிலும் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அப்பாவி முஸ்லிம்களை சிறைச்சாலைகளில் நிரப்பி வைத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது போன்ற நடவடிக்கையினால், எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் உருவாக வழிவகுக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.
அப்பாவி முஸ்லிம்களை அநியாயமாக சிறையில் அடைக்க வேண்டாம்
Reviewed by Editor
on
May 31, 2019
Rating:
