நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்




இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். 

அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. 

தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்த 30 ஆம் திகதி 2 வது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

அதனைத் தொடர்ந்து முதற் தடவையாக மாலைத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்கிறார். 

அயல் நாடுகளுடனான நட்புறவுக்கு உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் Reviewed by Editor on June 06, 2019 Rating: 5