எமது பதவி துறப்பு பெரும்பான்மை சமூகத்தை சிந்திக்க வைத்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.வியாழக்கிழமை காலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவாத பிரச்சாரம் பெரும்பான்மை சமூகத்தினரிடம் பாரிய தாகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கூறும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கூட அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலைக்கு தள்ளப்பட்டுளார்கள்.
இதனால் பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்களை எதிரிகளாகவும் அவர்களின் மதத்தை அழிக்க வந்தவர்களாகவும் நினைக்க ஆரம்பித்து முஸ்லிம் விரோத செயற்பாடுகளை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவ்வாறான நிலையிலேயே ரத்ன தேரரின் உண்ணாவிரதமும் ஞானசார தேரரின் ஊர்வலமும் நாடு முழுவதும் பரவும் அபாயம் காணப்பட்டது.

அவ்வாறு நடைபெற்றிருப்பின் அது நாடு முழுவதும் பாரிய இன கலவரத்தை ஏற்படுத்தி இருக்கும். இதனால் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே எமது அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவது என்ற முடிவுக்கு வந்தோம்.
இந்த பதவி விலகலானது இனவாத பிரச்சாரத்துக்குள் மூழ்கியிருந்த பெரும்பான்மை சமூகத்தை சிந்திக்க வைத்துள்ளது. இதன்மூலம் எமது பக்க நியாயங்களை அவர்கள் சிந்திப்பதற்கான சந்தர்பம் ஏற்பட்டுள்ளது. பௌத்த துறவிகளை கொண்டு ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிடலாம் என கணக்கு போட்டவர்களின் கணக்கும் பிழைத்து போயுள்ளது.

மீண்டும் எம்மை மகாசங்கத்தினர் பதவிஎற்றுக்கொள்ளும்படி கூறி இருப்பது எமக்கு கிடைத்த முதல் வெற்றியே. ஆனாலும் இப்போது பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்வது சாத்தியமாகாது என்றே நான் கருதுகிறேன்.ஏன் எனில் முஸ்லிம் அமைச்சர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு அதன் அறிக்கை வெளியிடப்படவேண்டும்.
அந்த அறிக்கை வெளிடப்பட்ட பின் எமது அமைச்சர்கள் மீது இனவாதிகள் யாரும் தீவிரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதன்மூலம் எமது சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் விடுக்கும் சூழ்நிலை முற்றாக களையவேண்டும். அதுவரை யாரும் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கமாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

எமது பதவி துறப்பு பெரும்பான்மை சமூகத்தை சிந்திக்க வைத்துள்ளது – இம்ரான் எம்.பி
Reviewed by Editor
on
June 06, 2019
Rating: