இராஜினாமா செய்தார் தேசிய புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரி!!!



தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரின் இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்தார்.

உடல் நலக்குறைவால் கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தமது பதவியை இராஜினாமா செய்வதாக சிசிர மென்டிஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி பதவிக்கு நிலவியுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில், சிசிர மென்டிஸ் அண்மையில் வாக்குமூலமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராஜினாமா செய்தார் தேசிய புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரி!!! இராஜினாமா செய்தார் தேசிய புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரி!!! Reviewed by Editor on June 08, 2019 Rating: 5