அபாயா ஆடை பற்றி முடிவெடுக்க அழைத்த போது உலமா சபையினர் வர மறுத்து விட்டார்கள் என்று தனது முகநூல் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் ரவூப் ஹஸீர்.
நாட்டில் தற்போது பேசு பொருளாகியுள்ள முஸ்லிம் பெண் ஊழியர்களின் அபாயா விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக 10 நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினரை அழைத்த போது அவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ள நேரமில்லை என்று கூறி இருந்து விட்டதாக மேலும் அவர் தனது பக்கத்தில் விளக்கியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் உலமா சபையினர் கலந்து கொண்டிருந்தால் அன்றே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றிருக்கலாம். அவர்கள் கலந்து கொள்ளாமல் விட்டதே பிரச்சினைக்கு காரணம் என்று கூறிய ரவூப் ஹஸீரின் முழுவதுமான முகநூல் பதிவு இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது.
ஹபாயா பற்றிய நேற்றைய சுற்று நிருபத்திற்காக அரசியல் வாதிகள் மீது கைது நீட்டுபவர்கள் கவனத்திற்கு.
*************************
சுமார் 10 நாட்களுக்கு முன் முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றிய மேல்மட்ட கலந்துரையாடல் ஒன்று தபால் தலைமையகத்தில், அமைச்சரது Conference room இல் நடந்தது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளதால் அதற்கான பரிந்துரைகளை உடனடியாக தெரிவிக்க வேண்டியுள்ளது என அங்கு தெரிவிக்க பட்டது.
முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மகளிர் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள் என கணிசமான தொகையினர் கலந்து கொண்டு பேசினர்.
'ஜமீயத்துல் உலமாவைச் சேர்ந்த எவரையும் அழைக்கவில்லையா!?' என அமைச்சர் ரிஷாத் கேட்டபோது , அவர்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது .
உடனே ரிஷாத் அவர்கள் , ஜமீயதுல் உலமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பிறகு இவ்வாறு சொன்னார் ,
அவர்கள் இப்போது பிராந்திய பிரதிநிதிகளோடு பேசிக்கொண்டிருக்கிறார்களாம் இன்று இங்கே வர முடியாதாம்.
"நோன்பு பெருநாள் முடிந்தபின் இதுபற்றி ஆழமாக ஆறுதலாக ஆராய்ந்து முடிவெடுக்கலாமே " என்கிறார்கள் , என்றார்.
இப்போது விரலை யார் பக்கம் நீட்டப் போகிறீர்கள் ????

நேரமில்லை என்று ஒதுக்கினார்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை!!!! என்கிறார் ரவூப் ஹஸீர்
Reviewed by Editor
on
June 02, 2019
Rating: