அதிகாலை வேளையில் வெலிகம - கோட்டகொட பகுதியில் பதற்றம்!!




வெலிகம – கோட்டகொட பகுதியில் இன்று (03) திங்கட்கிழமை அதிகாலை பதற்றநிலை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனந்தெரியாத நபர்கள் ஊர் எல்லையில் காத்திருப்பதாகவும், அவர்களில்  சிலர் ஊருக்குள் உட்புகுந்துள்ளதாகவும் கிடைத்த தகவல்களை அடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
எனினும் பொலிசார் விரைந்து வந்துள்ள போதிலும், பொலிசார் முன்நிலையிலேயே ஒரு முஸ்லிம் நபர் தாக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அப்பகுதிக்கு இராணுவத்தினரும் விரைந்துள்ளனர்.
இந்நிலையில் வீதிகளில் உள்ள முஸ்லிம்களை விரட்டுவதிலேயே பாதுகாப்புத் தரப்பு குறியாக உள்ளதாகவும், சிங்கள இளைஞர்களை திருப்பி அனுப்புவதில் எத்தகைய கவனமும் செலுத்தவில்லை எனவும் ஊர் மக்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அதிகாலை வேளையில் வெலிகம - கோட்டகொட பகுதியில் பதற்றம்!! அதிகாலை வேளையில் வெலிகம - கோட்டகொட பகுதியில் பதற்றம்!! Reviewed by Editor on June 03, 2019 Rating: 5