டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ள சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும்,
வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன் சர்ச்சைக்கு பெயர் போனவர். தனது தந்தையின் மறைவுக்கு பின் கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற இவர் நாட்டில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே.
அதுமட்டுமின்றி ஐ.நா.வின் தீர்மானங்களையும் மீறி தொடர்ச்சியாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச நாடுகளை அதிரவைத்து வந்தார். இது ஒருபுறம் இருக்க தனது அரசில் ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் தனக்கு விசுவாசமாக இல்லாதவர்களுக்கு, கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றியதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அப்படியான ஒரு செய்தி தற்போது வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வியடைந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கான சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் 4 பேரை சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியதாக தென்கொரியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை தோல்வி, ஏற்பாடு செய்த அதிகாரிகளை சுட்டுப் படுகொலை செய்த கிம்!!
Reviewed by Editor
on
June 02, 2019
Rating:
