அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தனது கல்விப் பணி செய்து கல்லூரியின் உள்ளக, பெளதீக, திட்டமிடல், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, பாடசாலையின் முன்னேற்றம், பரீட்சையின் அடைவு மட்டங்களை அதிகரித்தல் மற்றும் இதற்கு மேலாக அதிபரின் திட்டமிடல் நடவடிக்கைகளுடன் உதவி ஒத்தாசை புரிந்து பாடசாலையை நல்லதொரு இடத்திற்கு கொண்டு வந்த #எமது_கல்லூரியின்_பிரதி #அதிபர்_அஸ்_ஸிறாஜ்_அஸ்தமனம் #எம்_எம்_நியாஸ்_சேரின் மரணச் செய்தி பாடசாலை சமூகத்தை மட்டுமின்றி அக்கரைப்பற்றை அதிர வைத்தது....
எந்த நேரமும் சிரிப்போடும், கலகலப்போடும், உதவுகின்ற மணப்பான்மையுடனும், நல்லதொரு ஆசானாக, பிரதி அதிபராக இருந்த எம் ஆசான் எம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி எம் மனதை ஏற்க மறுக்கின்றது...
#எப்போது நாம் மீண்டும் நியாஸ் சேர் பாடசாலை "மைக்கில்" பேசுவதை கேட்க போகின்றோம்...
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
அஸ்-ஸிறாஜின் சொத்து ஆசான் நியாஸ் சேர் எம்மை விட்டு பிரிந்து விட்டார்....
Reviewed by Editor
on
June 11, 2019
Rating:
