அனுராதபுரம், கெக்கிராவ – திப்பட்டுவெவவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வீதியில் மூன்று சிறுவர்களை மோதிக் கொன்றுவிட்டு வாகனமொன்று தப்பியோடியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வீதியில் இறங்கி ரயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ – 9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையையடுத்து அங்கு பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் மூவர் பலியானதையடுத்து திப்பட்டுவெவவில் பெரும் பதற்றம்!!!
Reviewed by Editor
on
June 08, 2019
Rating:
