கொழும்பின் சில இடங்களில் நீர் வெட்டு!!!



 கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (08) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹோகந்தர பகுதியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, ரத்மலானை மற்றும் சொய்சாபுர வீடமைப்புத் திட்டம் ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.



கொழும்பின் சில இடங்களில் நீர் வெட்டு!!! கொழும்பின் சில இடங்களில் நீர் வெட்டு!!! Reviewed by Editor on June 06, 2019 Rating: 5