மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!!!



இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல், வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 – 150 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மன்னாரிலிருந்து கொழும்பு தொடக்கம் காலி வரையான கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதனால் கடற்சார் ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் தமது கடல் நடவடிக்கைகளின்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!!! மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!!! Reviewed by Editor on June 04, 2019 Rating: 5