பெருநாளையாவது நிம்மதியாக கொண்டாட விடுங்கள்- ஆளுனர் ஆசாத் சாலி பிரதமரிடம் வேண்டுகோள்...



முஸ்லிம்களை பெருநாளையாவது நிம்மதியாக கொண்டாட விடுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் ஆசாத் சாலி.
 முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் பொது சேவை நிர்வாகம் வெளியிட்டிருந்த குழறுபடியான சுற்று நிருபம் தொடர்பில் பிரதமரை அவசரமாக சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு ஆளுனர் வலியுறுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துவதாக வாக்குறுதியளித்துள்ள பிரதமர் சுற்று நிருபம் வெளியிடுவதை தற்காலிகமாக தடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரச திணைக்களங்கள் முரண்பாடான தகவல்களை வெளியிடுவதன் ஊடாக குழப்பங்களை உருவாக்கி வருகின்றமையும் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியும் விசமத்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பெருநாளையாவது நிம்மதியாக கொண்டாட விடுங்கள்- ஆளுனர் ஆசாத் சாலி பிரதமரிடம் வேண்டுகோள்... பெருநாளையாவது நிம்மதியாக கொண்டாட விடுங்கள்- ஆளுனர் ஆசாத் சாலி பிரதமரிடம் வேண்டுகோள்... Reviewed by Editor on June 01, 2019 Rating: 5