ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவிற்கு, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு இன்று (6ஆம் திகதி) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவர்கள் இன்று முற்பகல் 11 மணிக்கு விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகினர்.
அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா ஆகியோர் இதுவரையில் விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
9 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவிற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ்மா அதிபர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் தெரிவுக்குழுவில் ஆஜர்!!!
Reviewed by Editor
on
June 06, 2019
Rating:
