முன்னாள் ஆளுநர் ரோஹித்த சஜித்துடன்


முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ரோஹித்த போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சராகவும், கிழக்கு மாகாண ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஆளுநர் ரோஹித்த சஜித்துடன் முன்னாள் ஆளுநர் ரோஹித்த சஜித்துடன் Reviewed by Editor on October 09, 2019 Rating: 5