நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG)ஆதரவுடன் அக்கரைப்பற்றில் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஒரு தொகுதி மாணவர்களுக்கான பாடசாலை கற்கை உபகரணங்கள் வழங்கலும், தற்காப்பு கலையில் சாதனை படைத்தவரை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (27) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வு அக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பதுர் நகர வட்டார வேட்பாளர் ஏ.சீ.முஹம்மட் நெளபர் தலைமையில், டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய தவிசாளர் சிறாஜ் மஸ்ஷூர் அவர்களும், விசேட அதிதிகளாக முன்னணியின் அமைப்பாளர் ஜனாப். நஜா அஹமட், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னணியின் கெளரவ உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கழகங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கற்றல் உபகரணங்கள் வழங்கலும், கெளரவிப்பு நிகழ்வும்
Reviewed by Editor
on
December 27, 2019
Rating:
