உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரின் சம்பளத்தை இரண்டரை இலட்சம் ரூபாவாக குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
அவருடைய தற்போதைய சம்பளம் 20 இலட்சம் ரூபா ஆகும். எவ்வாறாயினும் தற்போது வரை 20 மில்லியனுக்கு அதிகமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் பெறப்படும் தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது டெலிகொம் நிறுவனத்தின் ஒருபகுதியாக இருக்கும் மொபிடெல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவங்களிடம் இருந்து அவர் பெற்றுக்கொள்ளும் சலுகைகளினாலாகும்.
ஜனாதிபதி தேர்தலின் பின் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களை நீக்கியதுடன் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக செயற்படுவது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன ஆவார்.
எவ்வாறாயினும் டெலிகொம் நிறுவனத்திற்கு அனுபவமும் தகுதியும் உள்ள ஒருவரை நியமிக்க ஜனாதிபதி ஏற்கனவே முடிவு செய்துள்ளார், மேலும் இது குறித்து ஆராய அரச நிறுவனங்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க நியமித்த குழுவை அறிவுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெலிகொம் தலைவர் குமாரசிங்க சிறிசேனவின் சம்பளம் அதிரடியாக குறைப்பு
Reviewed by Editor
on
December 06, 2019
Rating:
