தாய் தந்தையின்றி சாதனை புரிந்த வவுனியா மாணவி


வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுலக்சனா என்ற மாணவி இம்முறை (2019) கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டி போட்டு மாவட்ட ரீதியில் முதல் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமையைத் தேடிக்கொடுத்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞானத்துறையில் மதனமோகன் சுலக்சனா மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 20வது இடத்தையும் பெற்றுள்ளார். இவர் மருக்காரம்பளைக் கிராமத்தில் வசித்து வரும் மாணவியான இவர், தாய் தந்தையரின்றி அம்மம்மா, மற்றும் சகோதரர்களின் அரைவணைப்பில் பல சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று சாதனை படைத்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கிராமப்புறங்களில் கல்விகற்கும் மாணவர்களே அதிகளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை கிராமப் புறப் பாடசாலையான வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் கடந்த காலங்களில் வறுமையில் கல்வி கற்கும் அதிகளாவான கிராமப்புற மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வாகி கல்விகற்று பலதுறைகளில் சாதனை படைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தாய் தந்தையின்றி சாதனை புரிந்த வவுனியா மாணவி தாய் தந்தையின்றி சாதனை புரிந்த வவுனியா மாணவி Reviewed by Editor on December 28, 2019 Rating: 5