கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு


சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் நோய் வேகமாக பரவுவதை தடுக்க சில நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு காய்ச்சலுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர்.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவுக்கும் வைரஸ் தொற்றியது. மனிதர்கள் மூலமாக எளிதில் பரவும் இந்த வைரஸ் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கும் பரவத் தொடங்கியது.

வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தும் வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு Reviewed by Editor on January 25, 2020 Rating: 5