மலைநாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும்!!! தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள்


"மலைநாட்டு விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) ஊடக சந்திப்பு இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை கண்டியில் இடம்பெற்றது.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் திரு. லால்காந்த அவர்கள் கருத்து தெரிவிக்கையில்-

காட்டு மிருகங்களால் குறிப்பாக குரங்கு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி போன்றவற்றால் விவசாய உற்பத்திகள் உட்பட நாளந்த வாழ்க்கை கூட மத்திய மலை நாட்டில் குறிப்பாக கண்டியில் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசாங்கமோ, அதிகாரிகளோ இதுவரை எந்த வகையிலும் கண்டுகொள்ளாத ஒரு விடையமாகவும், இது நீண்ட நாளாக காணப்படும் ஒரு பாரிய மக்கள் பிரச்சினையாகவும் இருப்பதோடு பலரும் தேசிய மக்கள் சக்தியிடம் இந்த பிரச்சினையை முன்வைத்ததன் பின்னணியிலேயே இன்றைய ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சினை குறித்து விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு பொருத்தமான தீரவினைப் பெற்றுக் கொள்ளும் வரை இவ்விடயம் குறித்து மேலும் கவனயீர்ப்பு மற்றும் மக்களை தெளிவூட்டும் நிகழ்வுகளும் அரசாங்க அதிகாரிகள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் நிகழ்வுகளும் எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் தேசிய ஜக்கிய நல்லாட்சிக்கான கட்சியின் தேசிய அமைப்பாளர் நஜா முகம்மத், மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் லால் காந்த, சிரேஷ்ட விரிவுரையாளர் அமரகீர்த்தி, ஐக்கிய இடதுசாரி முன்னணி மத்திய குழு உறுப்பினர் சட்டதரணி லால் விஜேநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலைநாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும்!!! தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள் மலைநாட்டு  விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும்!!! தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள் Reviewed by Editor on January 28, 2020 Rating: 5