கொழும்பிற்கு செல்பவர்கள் கட்டாயம் மாஷ்க் அணிந்து செல்லவும்


சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த வைத்தியரும் வைரஸ் தாக்கியதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஒரு தொற்று நோய். இந்து வைரஸ் நோய் தாக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் 237 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவிய முதல் நகரமான வுஹான் நகரம் முற்றிலும் முடங்கி போயுள்ளது. யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து வுஹானுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் தீவிர சிகிச்சை டாக்டர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸின்ஹுவா ஆஸ்பத்திரி டாக்டரையும் இந்த வைரஸ் தாக்கியது. அவர் பெயர் லியாங் வுடோங். வயது 62. இந்த ஆஸ்பத்திரியில் அவர் மூத்த டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

அறுவை சிகிச்சை நிபுணராக வேலை பார்த்து வந்த அவரை, கடந்த வாரமே கொரோனா வைரஸ் தாக்கியது. அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டநிலையில் 9 நாள் போராடியும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணம் அடைந்தார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பாக இது கருதப்படுகிறது. கொரோனா வைரசுக்கு மருந்துகள் இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக கொழும்பிற்கு செல்பவர்கள் சன நெரிசலுள்ள இடத்திற்கு கட்டாயம் மாஷ்க் அணிந்து செல்லுங்கள். இல்லையேல் இக்கொடிய வைரஷிலிருந்து தப்பிக்கவே முடியாது.

இந்த நோயின் அறிகுறிகளாவன...

1. காய்ச்சல்
2. தலைவலி
3. மூக்கிலிருந்து நீர்வடிதல்
4. தொண்டை வலி
5. இருமல் ஆகியவையாகும்.

இந்நோயிலிருந்து தப்பித்து கொள்வதற்கு செய்ய வேண்டியவைகள்..

1. சன நெரிசலுள்ள இடங்களைத் தவிர்த்தல்
2. கை,கால்களை சவர்க்காரம் கொண்டு கழுவுதல்
3. கண்,மூக்கு,வாய் போன்ற உறுப்புகளை சவர்க்காரம் கொண்டு கழுவிய பின்னரே தொடுதல் வேண்டும்.
கொழும்பிற்கு செல்பவர்கள் கட்டாயம் மாஷ்க் அணிந்து செல்லவும் கொழும்பிற்கு செல்பவர்கள் கட்டாயம் மாஷ்க் அணிந்து செல்லவும் Reviewed by Editor on January 26, 2020 Rating: 5