அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தமது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்


திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தை சேர்ந்த ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தமது கடமைகளை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று(14) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள்,மதத் தலைவர்கள், மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இவர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கடற்றொழில் மற்றும் மீன்பிடி அமைச்சின் மேலதிக செயலாளர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளையும் முன்னர் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தமது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தமது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் Reviewed by Editor on February 14, 2020 Rating: 5