கழியோடை முதல் பொத்துவில் வரையான பெரு நிலப்பரப்பில் வாழும் பிராந்திய மக்களுக்கிருக்கின்ற ஒரே தெரிவு அதாஉல்லாஹ்!!!
(தல்ஹா சீனி முஹம்மட்)
அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச மக்கள் இம்முறை (2020) பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பொருத்தமான வேட்பாளரினை உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டிய கடமைப்பாட்டுடன் இருக்கின்றோம்.
அம்பாரை மாவட்டத்தில் இயங்கு நிலையில் உள்ள கட்சிகள் மக்கள் நலன்களை நிறைவு செய்யும் பொருத்தமான வேட்பாளர்களை தெரிவு செய்யாமல் பெரும் தவறினை கடந்த காலங்களில் செய்துள்ளனர்.
இந்த தவறினால் பெறுமதியான எமது வாக்குகளை சில்லறைத் தனமான வேட்பாளர்களுக்கு வழங்க மக்கள் தயங்குவதுடன், அதற்கு பொருத்தமான ஓர் வேட்பாளர் வரவேண்டும் என்று மக்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் காலத்தினை வீனடித்து இலைத்து போன நிலையில் காணப்படுவதனால், மஹிந்த அரசாங்கத்தில் ஒப்பீட்டு ரீதியில் செயலாற்றுனராக காணப்பட்ட முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தற்போது மக்களின் முதல் தெரிவாக மாறியுள்ளார்.
கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் பிரதேச மக்கள் கட்சி அரசியலை தாண்டி முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்வினை மஹிந்த அரசாங்கத்தில் பயன்படுத்தியிருக்க முடியும், ஆனால் முஸ்லிம் காங்கிரசின் சில முகவர்கள் கட்சிக் கண்ணாடி கொண்டு பார்த்ததன் விளைவால் அதாஉல்லாஹ் அவர்களினால் அப்பிரதேச மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிறைய விடயங்களினை தடுத்துவிட்டதை யாரும் அறியாமல் இல்லை.
கடந்த 2015ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்வினை தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தினை உருச் செய்த ஹக்கீம் காங்கிறசினர் உலகின் பெரு நகரங்களின் பெயர் குறித்து அதுபோல் மேற்குறித்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வோம் என வாயளந்து எதனையும் செய்யவில்லை.
அதாஉல்லாஹ் அக்கரைப்பற்று என்று குறைசொன்னோர் நிறை கண்டு அக்கரைப்பற்று போல் நமதூரும் செழிக்க அம்பாரை மாவட்ட அபிவிருத்தி அரசியலின் பிதாவாக மீளவும் அதாஉல்லாஹ் வருவதற்கு மக்கள் ஆவல் கொண்டுள்ளனர் அதுதான் யதார்த்தமும் கூட.
இன்னும் கழியோடை முதல் பொத்துவில் வரையான பெரு நிலப்பரப்பில் வாழும் பிராந்திய மக்களுக்கிருக்கின்ற ஏக தெரிவாகவும் அதாஉல்லாஹ் காணப்படுகின்றார்.
வரட்டுத்தனமான போலி உணர்ச்சியூட்டலினூடாக கோத்திரங்களாக பிரியாமல் நம்பிக்கையோடு அவரினை பலப்படுத்தல் தற்போதைய காலத்தின் தேவையாக காணப்படுகிறது.
கழியோடை முதல் பொத்துவில் வரையான பெரு நிலப்பரப்பில் வாழும் பிராந்திய மக்களுக்கிருக்கின்ற ஒரே தெரிவு அதாஉல்லாஹ்!!!
Reviewed by Editor
on
February 07, 2020
Rating:
Reviewed by Editor
on
February 07, 2020
Rating:
