கத்தார் நாட்டின் செனயா 1 முதல் 32 வரையான பகுதியில் 12 மில்லியன் சதுர மீட்டர் அளவிலான பரப்பில் இரண்டு நாட்களில் அந்நாட்டின் உள்ளுராட்சி நிறுவனத்தின் சுகாதார பிரிவினரால் கிருமிநாசினி தெளித்து சுத்திகரிப்பு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கிருமிநாசினி தெளிக்கும் செயற்பாடானது பொது சுகாதார அமைச்சு, பாதுகாப்பு படை மற்றும் பொதுப்பணி அதிகாரசபை (Ashghal) ஆகியவற்றுடன் இணைந்து நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினால் (பலதிய்யா) நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிருமிநாசினி தெளிக்கும் செயற்றிட்டத்தை குறித்த நேரத்தில் முடிக்க, 57 வாகனங்கள் மற்றும் 89 பேரைக்கொண்ட 10 அணிகள் பயன்டுத்தப்பட்டுள்ளன என நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தாரில் கொரோன வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கத்தார் செனயா பகுதிகளில் கிருதிநாசினி தெளிக்கும் பணி
Reviewed by Editor
on
March 31, 2020
Rating:
Reviewed by Editor
on
March 31, 2020
Rating:
