எனது புகைப்படங்களை பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி அறிவிப்பு


தன்னுடைய புகைப்படங்களையோ அல்லது சித்திரங்களையோ பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (01) கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உருவப்படம், ஓவியங்கள் (Portrait) மற்றும் புகைப்படங்களைப் பாதையோரங்களிலும், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களிலும் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

தனது உருவத்தை வரையும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், புகைப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன் என்று ஜனாதிபதி அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
எனது புகைப்படங்களை பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி அறிவிப்பு எனது புகைப்படங்களை பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி அறிவிப்பு Reviewed by Editor on March 01, 2020 Rating: 5