தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா மற்றும் சவூதி அரேபியாவிற்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சீனாவின் பீஜிங் சென்ஹாய் மற்றும் குவென்ஷோ ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை மார்ச் 10 திகதி தொடக்கம் ஏப்ரல் 30ஆம் திகதியும்,
சவூதி அரேபியாவின் ஜித்தா விமான சேவைகளை மார்ச் 15 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 30 ஆம் திகதி வரையும் இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து, நிலைமை வழமைக்கு திரும்பினால் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் விமான சேவையை முன்னெடுக்க முடியும் என ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனா மற்றும் சவூதிக்கான விமான சேவையை ரத்து செய்தது
Reviewed by Editor
on
March 08, 2020
Rating:
Reviewed by Editor
on
March 08, 2020
Rating:
