(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த இலங்கை பெண்ணொருவர் இன்று (20) இங்கிலாந்தில் மரணமடைந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனையைச் சேர்ந்த இவர் குடும்பத்தோடு இங்கிலாந்தில் வசித்து வருகின்றார்.
55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான இவர் அந்நாட்டிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்மணி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மரணமடைந்துள்ளாதாக வைத்தியர்கள் மரணமடைந்த பெண்னின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளாதாக, குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் வாழைச்சேனைப் பெண் இங்கிலாந்தில் மரணம்
Reviewed by Editor
on
April 20, 2020
Rating:
Reviewed by Editor
on
April 20, 2020
Rating:
