வெளிநாடுகளுக்கு கற்கச் சென்ற மாணவர்கள் வருகை


இலங்கையில் கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அத்துடன் விமான நிலையங்களையும் மூடிவிட அரசாங்கம் தீர்மானித்தது.

வெளிநாடுகளில் கல்வி கற்கும் மற்றும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா நுழைவு அனுமதியில் சென்று தங்கியுள்ள பல இலங்கை மாணவர்களும் மக்களும் நாடு திரும்புவதற்கான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

வெளிநாடுகளில் தாய்நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் முதற்கட்டமாக அண்மையில்  இலங்கை விமானசேவையைச்சேர்ந்த UL 1206, UL 1145 மற்றும் UL 1124 ஆகிய விமானங்கள் பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சென்று 2020.04.22,23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அங்கு விமான நிலைய அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரால் நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை விமான சேவை பணியாளர்கள், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய பணியாளர்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சேவைகளின் பணியாளர்களை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாராட்டியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு கற்கச் சென்ற மாணவர்கள் வருகை வெளிநாடுகளுக்கு கற்கச் சென்ற  மாணவர்கள் வருகை Reviewed by Editor on April 24, 2020 Rating: 5