கொரோனா வைரஸ் தொற்றை தெரிந்து கொண்டு சீனா பரப்பியிருந்தால் அதற்கான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வூஹானில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து சீனா வெளிப்படையான தகவல்களை அளிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி மற்றும் மூத்த அதிகாரிகளும் குற்றம்சாட்டி வந்துள்ளனர். அதன் விளைவாகவே உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்கப்படும் நிதியை நிறுத்துவதாக கடந்த வாரம் ட்ரம்ப் அறிவித்தார்.
இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் பேசும் போது-
கொரோனா வைரஸ் பரவ தொடங்குவதற்கு முன்னரே சீனாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம். தடுத்து நிறுத்தப்படாததால், ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய தவறு. ஆனால் அவர்கள் தெரிந்தே பொறுப்பாளர்களாக இருந்திருந்தால் பாரிய பின்விளைவுகளை அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தார். ஆனால் எவ்வகையான விளைவுகள் என்பது குறித்து ட்ரம்ப் விரிவாக குறிப்பிடவில்லை.
மேலும் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவ தொடங்கியதா என கேள்வி எழுப்பியுள்ள ட்ரம்ப் , அது குறித்து தனது அரசு விசாரிக்க இருப்பதாவும், சீனாவின் கொரோனா இறப்பு விகிதம் குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடெனை ‛ஸ்லீப்பி ஜோ’ என மறைமுகமாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தன்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடென் வெள்ளை மாளிகையை வென்றால், சீனா மற்றும் இதர நாடுகள் அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுமென வெள்ளை மாளிகை சந்திப்பை பிரசார மேடையாகவும் ட்ரம்ப் பயன்படுத்தி உள்ளார் என்று சர்வதேச ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
எங்களை சீண்டி பார்த்துள்ளார்கள், ட்ரம்ப் எச்சரிக்கை
Reviewed by Editor
on
April 19, 2020
Rating:
Reviewed by Editor
on
April 19, 2020
Rating:
