கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல் இன்று (06) திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும்,
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநித்துவப்படுத்தி அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கொரோனா நோய்க்கிருமி நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச விளக்கினார்.
கொரோனா நோய்த்தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் நாம் செயற்பட்ட விதம் குறித்தும், ஏனைய நாடுகளையும் மிஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக நாம் உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டதனையும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.
சுகாதார மற்றும் பல்வேறு துறைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் இதன்போது கலந்துரையாடினார்கள்.
சஜீத் , கோட்டாபய சந்திப்பு
Reviewed by Editor
on
April 07, 2020
Rating:
Reviewed by Editor
on
April 07, 2020
Rating:



