(சப்னாஸ்)
அட்டாளைச்சேனை அக்/அந்-நூர் மகா வித்தியாலத்தில் வரலாற்றுச் சாதனை படைத்த நாசர் பாத்திமா சப்றா என்பவரை “CEO ADDALAICHENAI” அமைப்பின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இன்று வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி அடைந்து மட்டுமல்லாமல், அட்டாளைச்சேனை கோணவத்தை பிரதேசத்தின் வரலாற்றில் சாதனை படைத்து 9A பெறுபேற்றினை பெற்று பெருமை சேர்த்து தந்த சாதனை நாயகியை இன்று (27) திங்கட்கிழமை மாலை வேளையில் வீடு தேடி சென்று வாழ்த்தி கெளரவித்து அவருக்கு பெறுமதியான பரிசில்களையும் வழங்கி கெளரவித்தார்கள்.
இந்த அமைப்பு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, தொடர்ந்தும் இந்த அமைப்பின் ஊடாக சித்தியெய்திய அனைத்து மாணவர்களையும் கெளரவித்து பரிசில்களும் வழங்க தயாராகி கொண்டிருக்கின்றது என்பதோடு, இவ்வாறான திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் போது எதிர் காலத்தில் இதனை கண்டு இன்னும் பல மாணவர்கள் இவ்வாறு உருவாக வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அட்டாளைச்சேனை அக்/அந்-நூர் மகா வித்தியாலத்தின் வரலாற்றுச் சாதனை
Reviewed by Editor
on
April 27, 2020
Rating:
Reviewed by Editor
on
April 27, 2020
Rating:
