இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் திங்கள் கிழமை (27) காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இன்று (25) நள்ளிரவு பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அலவத்துகொட பொலிஸ் பிரிவு, கேகாலை மாவட்டம் வரகாபொல பொலிஸ் பிரிவு, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் இதுவரை அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு முற்றாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஊடரங்கு மீண்டும் எப்போது அமுல் படுத்தப்படும் என்ற தகவல்கள் அதில் தெரிவிக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஊடரங்கு தளர்த்தப்படுகிறது
Reviewed by Editor
on
April 25, 2020
Rating:
Reviewed by Editor
on
April 25, 2020
Rating:
