COVID-19 எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பேருந்து வழங்கி வைக்கப்பட்டது


COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக - மைக்ரோ கார் லிமிடெட் - Micro Car Limited - நிறுவனம் - 90 லட்சம் ரூபாய்கள் மதிப்புள்ள பேரூந்து ஒற்றை நன்கொடையாக அளித்திருக்கின்றது.

இந்த பேருந்தை - மைக்ரோ கார் லிமிடெட் நிறுவன தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேரா, இன்று (27) திங்கட்கிழமை சனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களிடம் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி செயலாளர் பி. பீ. ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதி பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
COVID-19 எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பேருந்து வழங்கி வைக்கப்பட்டது COVID-19 எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பேருந்து வழங்கி வைக்கப்பட்டது Reviewed by Editor on April 27, 2020 Rating: 5