கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வடைந்துள்ளதாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருணாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளதோடு, 194 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஆவது மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது
Reviewed by Editor
on
May 04, 2020
Rating:
