இரு குழந்தைகளின் மரணம், சம்மாந்துறையை சோகத்திற்குள்ளாக்கியது


இன்று (9) மாலை 5:30 மணியளவில் சம்மாந்துறை Block "J" கிழக்கு -03 பகுதியில் 6 மற்றும் 3 வயது மதிக்க தக்க இரு ஆண் குழந்தைகள் கொட்டு பதிக்கப்பட்ட கிணற்றில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரு குழந்தைகளே இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தவராவார்கள் என்பதுடன் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஜனாஸாக்களும் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



இரு குழந்தைகளின் மரணம், சம்மாந்துறையை சோகத்திற்குள்ளாக்கியது இரு குழந்தைகளின் மரணம், சம்மாந்துறையை சோகத்திற்குள்ளாக்கியது Reviewed by Editor on May 09, 2020 Rating: 5