பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்


கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் ஊரடங்கை தளர்த்தாமல் பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தொழிலுக்கு செல்பவர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் அடையாள அட்டைகளின் இறுதி இலக்கங்களுக்கு அமையவே வீடுகளில் இருந்து வௌியேற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களின் இருப்பிடத்தில் இருந்து மிக அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல முடியும் எனவும், அத்தியாவசிய சேவைகளின் பொருட்டு உணவு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை மாத்திரம் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாகவே அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(நியுஸ்1st)

பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் Reviewed by Editor on May 08, 2020 Rating: 5