(றிஸ்வான் சாலிஹூ)
முஸ்லீம் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரிய உள்ளுராட்சி மன்ற தீர்மானம் இன்று (14) வியாழக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபையில் வெற்றிகரமாக எடுக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கெளரவ அதாஉல்லா அகமட் சகியினால்
இன்று அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வின் போது எமது மத உரிமையை பெற்றுக் கொள்ள கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட எங்களது முஸ்லீம் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்
என்ற கோரிக்கையை அக்கரைப்பற்று மாநகர சபை தீர்மானமாக நிறைவேற்றி நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மந்திரி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநகர மேயர் இன்றைய அமர்வில் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபையினால் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு, இவ்வாறான தீர்மானத்தை முதலாவதாக மேற்கொண்டது அக்கரைப்பற்று மாநகர சபை என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று மாநகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றம்
Reviewed by Editor
on
May 14, 2020
Rating:
