அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கடந்த இரண்டு மாதங்களாக தொலைதூர கல்வி முறையின் கீழ் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துவருவதாக உயர்கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக அமைச்சின் செயலாளர் அனுரா திசாநாயக்க தெரிவித்தார்.
கொவிட் தொற்று நோய் தடுப்பிற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மத்தியில் உயர்கல்வி அமைச்சகமும் அளித்தவரும் ஒத்துழைப்பு குறித்து விளக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்றது.
இதன் போது அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் :பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் கல்வி பயிலும் சுமார் 60 இலட்ச மாணவர்கள் பயனுள்ளவகையில் இந்த கல்வி முறையை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்தோம். இதன்போது இதனை மாணவர்கள் மிகவும் பயனுள்ளவகையில் பயன்படுத்துவதை கண்டறிந்தோம் என்றார்.
ஜனாதிபதியின் செயலணி உள்ளிட்ட நிபுணர்கள் கூட்டாக இது குறித்து விவாதித்தனர். இதனைத்தொடரந்து Zoom app , WhatsApp போன்றவற்றை பயன்படுத்தி அனைத்து மாணவரகளுக்கும் இணைய கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
தற்போது இந்த தொழில்நுட்பம் மூலமான கல்வி செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருகிறது. இந்த அனுபவங்களின் மூலம், எதிர்காலத்தில் பெரும் எண்ணிக்iயிலான மாணவர்கள உயர் கல்வி வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெறுவார்கள் என்றும் உயர்கல்வி, செயலாளர் அனுரா திசாநாயக்க தெரிவித்தார்.
விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொற்றுநோயை எதிர்கொள்வதில் ஒரு புதிய போக்கு ஏற்பட்டுள்ளது.
விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கொரோனா வைரசு தொற்றுநோயை தடுபப்பதற்கான புத்தாக்கங்களை மேற்கொள்வதில் ஆர்வங்காட்டி வருகின்றனர்..புத்தாக்க ஆணைக்குழு உடனடியாக தலையிட்டு இந்த செயல்முறைக்கு நிதி உதவி வழங்கியது, அடையாளம் காணப்பட்ட 180 புத்தாக்கங்களில் , 60 தயாரிப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. கடந்த காலத்தில் 112 புதிய கண்டுபிடிப்புகள் பெறப்பட்டுள்ளன, மேலும் நிபுணர்களின் குழுவினர் இதுதொடரபில் கவனம் செலுத்திவருகின்றனர் உயர்கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக அமைச்சின் செயலாளர் அனுரா திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
இணையதள கல்வியில் மாணவர்கள் கூடுதலான ஆர்வம்
Reviewed by Editor
on
May 12, 2020
Rating:
