ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (18) திங்கட்கிழமை மாலை கூடவிருக்கிறது என்று கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை 5.00மணிக்கு கூடவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துள்ளதோடு, குறிப்பாக நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் சம்பந்தமாக முக்கியமான விடயங்கள் இதில் பேசப்படும் என்றும் செயலாளர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது
Reviewed by Editor
on
May 18, 2020
Rating:
