கிரிக்கட் நடுவர் தரம்-04ற்கு உயர்த்தப்பட்டார்கள்!!!


(றிஸ்வான் சாலிஹூ)
     
கிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனையைச் சேர்ந்த ஐ.எல்.எம்.பாயிஸ், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஜெ.பஸ்மீர் மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த எஸ்.எம்.ஆரீப் ஆகியோர்கள்
இலங்கை கிரிக்கட் சபையின் நடுவர்களுக்கான விரைவு தரமுயர்வு (Fast Track Promotion) பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வு கடந்த 2019 இறுதிப்பகுதியில் இலங்கை கிரிக்கட் சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

சென்ற வருட இறுதியில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற பதவி உயர்வு பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் நடுவர் தரம் ஐந்திலிருந்து நான்கிற்கு இவர்கள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

இவர்களுக்கான பதவியுயர்வு கடிதம் நேற்று (09) வியாழக்கிழமை கொழும்பு ஆர் பிரேமதாச (கெத்தாராம) சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இலங்கை கிரிக்கட் சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சர்வதேச கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேன கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கிரிக்கெட் நடுவர் தரம்-04ற்கு பதவி உயர்த்தப்பட்ட மூன்று பேரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கட் நடுவர் தரம்-04ற்கு உயர்த்தப்பட்டார்கள்!!! கிரிக்கட் நடுவர் தரம்-04ற்கு  உயர்த்தப்பட்டார்கள்!!! Reviewed by Editor on July 10, 2020 Rating: 5