காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு


காரைதீவு பிரதேச சபை தோடம்பழ சுயேச்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம் பஸ்மீர் இன்று(16) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு மாளிகைக்காட்டில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரருமான எச்.எம்.எம் ஹரீஸின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டதுடன் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து தேர்தல் கேட்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காகவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வெற்றிக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்பஸ்மீர் குறிப்பிட்டு இருந்தார்.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு Reviewed by Editor on July 16, 2020 Rating: 5