(றிஸ்வான் சாலிஹூ)
அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது என அமெரிக்க பிரஜை Eliana Apicella பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த அமெரிக்க பிரஜை அண்மையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் விடுதி 6 இல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல்வளரி அழற்சி (Appendicitis) இருப்பது கண்டறியப்பட்டு குடல் வளரியை அகற்றும் அறுவைசிகிச்சை (Appendicectomy) சத்திர சிகிச்சை நிபுணர் Dr. பீ.கே.ரவீந்திரன் தலைமையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
அந்த அமெரிக்க பிரஜை, செவ்வாய்க்கிழமை (11) பூரண சுகத்துடன் சத்திர சிகிச்சை விடுதியை விட்டு வெளியேறும் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மேம்பட்ட சேவையை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
அமெரிக்காவில் உள்ள வைத்திய சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை மிகச் சிறந்தது என்றார்.
அதனடிப்படையில், அவர் தெரிவித்த இந்த பாராட்டு எமது வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு கிடைக்கும் சிறந்ததொரு அங்கீகாரம் என்று வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
August 14, 2020
Rating:
