மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக நேற்று (12) மேற்கொண்ட கலந்துரையாடலின்போது, இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமைத்துவத்தின்கீழ், கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது, கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் பெறுபேறுகளை ஆராய்ந்த பின்னர் உடனடியாக கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இதன்போது தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.
நாளை (14) நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Reviewed by Editor
on
August 13, 2020
Rating:
