கொரோனா நோய் தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியிலும் இன்று 70%மான மக்கள் வாக்களிப்புக்காக வருகை தந்துள்ளனர், இவர்களுக்கு தேர்தல் ஆணையாளர் நன்றியை தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (05) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி இன்று மாலை 5 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,
நுவரெலியா - 75%
மொனராகலை - 74%
பதுளை - 74%
திருகோணமலை - 74%
ஹம்பாந்தோட்டை - 73%
வன்னி - 73%
இரத்தினபுரி - 73%
கொழும்பு- 72%
திகாமடுல்ல - 72%
மட்டக்களப்பு - 72%
மாத்தறை - 71%
களுத்துறை - 71%
மாத்தளை - 71%
பொலன்னறுவை - 71%
கண்டி - 71%
அனுராதபுரம் - 71%
கேகாலை - 71%
கம்பஹா - 69%
குருணாகலை - 69%
காலி - 69%
யாழ்ப்பாணம் - 64%
புத்தளம் - 63%
தேர்தல் வரலாற்றில் பாரிய வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தலாக இப்பாராளுமன்றத் தேர்தல் பதிவாகியுள்ளது. தேர்தல் தலைமையக முறைப்பாட்டுப் பிரிவிற்கு தேர்தல் காலப்பகுதிக்குள் 8500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. என்றாலும் இவற்றில் பாரிய வன்செயல்கள் எவையும் பதிவாகியிருக்கவில்லை.
இன்றைய (05) தினம் பாரிய வன்முறையாக அநுராதபுரத்தில் தஹய்யகம பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த SF லொக்க எனும் இரேன் ரணசிங்க துப்பாக்கியால் சுட்டு கொலைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது. ஆனால் அது தேர்தல் வன்முறையுடன் சம்பந்தபட்ட ஓர் சம்பவம் அல்ல என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியா அவர்கள் தேர்தல் முடிவடைந்ததும் தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகமாநாட்டில் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், கொரோனா நோய் பரவல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ள தேருநர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இது கவலைகுரிய விடயமாகும். என்றாலும் இதற்கான பிரதான காரணம் தேர்தல் சட்டத்தில் இதற்கான ஏற்பாடுயின்மையாகும்.
அமைதியான முறையில் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தல்
Reviewed by Sifnas Hamy
on
August 05, 2020
Rating:
Reviewed by Sifnas Hamy
on
August 05, 2020
Rating:
