(எம்.ஐ.அப்துல் நஸார்)
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு இன்று (04) பிரதான வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
பொதுத் தேர்தல் நாளை (05) இடம்பெறவிருக்கின்ற நிலையில் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 428 வாக்கெடுப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மகாஜனக் கல்லூரிகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
வழமைக்கு மாறாக இம்முறை கோவிட் 19 கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும்இ கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும்இ பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இது தவிர இத்தேர்தல் கடமைகளுக்காக 307 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் இம்மாவட்டத்தைச் சேர்ந்த அரச திணைக்கள வாகனங்கள் 159 உம், பிற மாவட்ட அரச வாகனங்கள் 54 உம் ஏனையவை வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் வாகனங்களுமாகும்.
இத்தேர்தல் பணியில் அரச உத்தியோகத்தர்கள் பொலிஸார் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்களிப்பு இடம்பெறவுள்ள 428 வாக்குச் சாவடிகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 57 நடமாடும் பொலிஸ் பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன
Reviewed by Editor
on
August 04, 2020
Rating:
Reviewed by Editor
on
August 04, 2020
Rating:
