(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய காங்கிரஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து அமையப் போகின்ற அரசாங்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றியை சிறப்பிக்கும் பொருட்டும், நாட்டின் ஜனாதிபதிக்கும் பதவியேற்றுக் கொண்ட பிரதமருக்கும், நாட்டின் சபீட்சத்திற்காகவும் இறை அருள் வேண்டி சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் பிரார்த்தனை நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பிரார்த்தனை வைபவம் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ். வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் உட்பட நிருவாகிகள், ஊர் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 11, 2020
Rating:
