தெஹியத்தகண்டிய வாகன விபத்தில் ஓட்டமாவடி நபர் வபாத்; மகன் படுகாயம்

 

(எச்.எம்.எம்.பர்ஸான்)

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று இன்று (23) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி – காவத்தமுனையிலிருந்து மீன் கொள்வனவுக்காக முச்சக்கர வண்டி ஒன்றில் தெஹியத்தகண்டிக்குச் சென்ற தந்தையும் மகனும் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இருவரும் முச்சக்கர வண்டியில் செல்லும்போது எதிரே வந்த கூலர் வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஓட்டமாவடி – காவத்தமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.சின்னத்தம்பி (வயது 60) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற அவரது மகன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் ஜனாஸா பிரேதப் பரிசோதனைக்காக தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தெஹியத்தகண்டிய வாகன விபத்தில் ஓட்டமாவடி நபர் வபாத்; மகன் படுகாயம் தெஹியத்தகண்டிய வாகன விபத்தில் ஓட்டமாவடி நபர் வபாத்; மகன் படுகாயம் Reviewed by Editor on August 23, 2020 Rating: 5