ஆளுநரின் விசேட கலந்துரையாடல்

(றிஸ்வான் சாலிஹூ)

ஊவா மாகாண அமைச்சுக்களின் அமைப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் கெளரவ ஏ.ஜே.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.

பாதை அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம், தோட்ட உட்கட்டமைப்பு, கூட்டுறவு, தமிழ் மொழிமூல கல்வி அமைச்சு ஆகிய நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில், இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சுக்களின் செயலாளர்களினால் ஆளுநருக்கு தெளிவூட்டப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகள் கலந்து கொண்டனர்.








ஆளுநரின் விசேட கலந்துரையாடல் ஆளுநரின் விசேட கலந்துரையாடல் Reviewed by Editor on September 09, 2020 Rating: 5