கல்முனையில் அரச பல்கலைக்கழக கல்லூரியினை நிறுவ, சப்ராஸ் மன்சூர் அமைச்சின் செயலாளரிடம் மனு கையளிப்பு



(எம்.எச்.எம்.றஸான்)

அம்பாறை மாவட்ட கரையோர பிராந்தியத்திற்கான அரச பல்கலைக்கழக கல்லூரியினை கல்முனையில் அமைப்பதற்கான மனுவினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் வியாழக்கிழமை (10) திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளித்தார்.

அத்துடன் பல்கலைக்கழக கல்லூரிக்கான இடம் மற்றும் கரையோர பிராந்திய மக்களுக்கு  பொருத்தமானதும் அம்மக்களின் உற்பத்தி திறனை மேன்படுத்தக்கூடிய NVQ 5/6 மட்டங்களுக்கான கற்கைநெறிகளை வடிவமைப்பதற்கான கொள்கைகளையும் ஆலோசனைகளையும் தனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் வழங்குவதற்காக தயாராக இருப்பதாக மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ஜானக ஜயலத் அவர்கள், மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூரிடம் உறுதி வழங்கியுள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கல்முனையில் அரச பல்கலைக்கழக கல்லூரியினை நிறுவ, சப்ராஸ் மன்சூர் அமைச்சின் செயலாளரிடம் மனு கையளிப்பு கல்முனையில் அரச பல்கலைக்கழக கல்லூரியினை நிறுவ, சப்ராஸ் மன்சூர் அமைச்சின் செயலாளரிடம் மனு கையளிப்பு Reviewed by Editor on September 11, 2020 Rating: 5