அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் அவசர வேண்டுகோள்


அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் (24) எழுமாறாக ஒரு சிலருக்கு நடாத்தப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் அடிப்படையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஒரு வார காலத்திற்குள் அக்கரைப்பற்று பொதுச் சந்தைக்கு சென்றவர்கள் தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் முகவரி அடங்கிய தகவல்களை தங்கள் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது கிராம சேவகர் அதிகாரியிடம் தெரிவிக்குமாறும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் அவசர வேண்டுகோள் அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் அவசர வேண்டுகோள் Reviewed by Editor on November 26, 2020 Rating: 5