கம்பஹாவில் சில இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்கள் நாளை திறப்பு, மேல் மாகாண பயணத்தடை நாளை நள்ளிரவுடன் நீக்கம்!!!



கொழும்பில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக,

மருதானை, 
கோட்டை, 
புறக்கோட்டை
கொம்பனித்தெரு, 
டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) 
மு.ப. 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்தில் தற்போது மாகாணத்தை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு, நாளை (15) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை
⏹கம்பஹா மாவட்டத்தில்
▶நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
▶ஜா-எல பொலிஸ் பிரிவு
▶ராகமை பொலிஸ் பிரிவு
▶கடவத்த பொலிஸ் பிரிவு
▶வத்தளை பொலிஸ் பிரிவு
▶பேலியகொடை பொலிஸ் பிரிவு
மற்றும்
▶களனி பொலிஸ் பிரிவிலும் திங்கட்கிழமை (16) மு.ப.5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நிலை நாளை (15) முற்பகல் 5.00 மணி முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், தற்போதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள, பின்வரும்  இடங்கள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் நாளை மு.ப. 5.00 மணிக்கு தனிமைப்படுத்தல் நிலை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

⏹குருணாகல் மாவட்டத்தில்
▶குருணாகல் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள்
▶குளியாபிட்டி பொலிஸ் பிரிவு

⏹களுத்துறை மாவட்டத்தில்
▶ஹொரணை பொலிஸ் பிரிவு
▶இங்கிரிய பொலிஸ் பிரிவு
▶வேகட மேற்கு கிராம சேவகர் பிரிவு

⏹கேகாலை மாவட்டத்தில்
▶ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு
▶மாவனல்லை பொலிஸ் பிரிவு

நன்றி - நியூஸ் லைன்

கம்பஹாவில் சில இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்கள் நாளை திறப்பு, மேல் மாகாண பயணத்தடை நாளை நள்ளிரவுடன் நீக்கம்!!! கம்பஹாவில் சில இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்கள் நாளை திறப்பு, மேல் மாகாண பயணத்தடை நாளை நள்ளிரவுடன் நீக்கம்!!! Reviewed by Editor on November 14, 2020 Rating: 5